Monday, July 18, 2011

என் முதல் வலை பதிவு!!

எனக்கு பிடித்த பாரதியின் கவிதையுடன்...



தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
 மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
 நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
 பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
 நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
 என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
 இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து -
 மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

எவ்வளவு அழகான வரிகள்!!சிந்தனையைத் தூண்டும் வரிகள்!!இலவசங்களை வாங்கிக் கொண்டு,சிந்தனையை இழந்து;சக தமிழன் இலங்கையில் சாகும் போது,தான் சுகமாக இருந்தால் போதும் என்று சுயநலமாக சிந்தித்து, கேவலப்பட்டுக் கொண்டிருக்கும் இன்றைய தமிழனுக்குத் தேவையான  சாட்டையடி கவிதை!!பாரதி ஒரு தீர்க்கதரிசி!!தமிழினம் இப்படி மானம் கெட்டுப் போகும் என்று தெரிந்ததாலே இதை எழுதினனோ,அந்த புரட்சிக் கவிஞன்??
இளைஞர்களே விழிதெழுங்கள்!!தன்மானம் மிக்க தமிழர்களாய்,தமிழை நேசிக்கும் தமிழர்களாய்,தன் இனத்தை நேசிக்கும் தமிழர்களாய் மீண்டெழுவோம்!!
தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளும் ஒரு தமிழச்சியின் பெருமிதமும்,அதே தமிழனின் இன்றைய நிலையை நினைத்து வேதனையும் படும் பதிவு இது!!

No comments:

Post a Comment